Monday, March 31, 2008

தமிழ்க்கூடல் - சிறப்புக்கருத்தரங்க அழைப்பிதழ்


வரலாற்று நாயகர்களின் நிகழ்வும் நினைவும் - சிறப்புக்கருத்தரங்கம் - புகைப்படத்தொகுப்பு

தோழர்.செந்தில், தோழர்.இராசகுமாரன்
பார்வையாளர்களின் ஒரு பகுதி

சிந்தனைச்சிற்பி அமர்வு


சிந்தனைச்சிற்பி அமர்வு


தமிழ்த்தாத்தா உ.வே.சா. அமர்வு

பாவலர் பட்டுக்கோட்டையார் அரங்கம்

வரலாற்று நாயகர்களின் நிகழ்வும் நினைவும் - சிறப்புக்கருத்தரங்கம்

தமிழர் சமூகநீதி பேரவையின் முதலாவது சிறப்புக்கருத்தரங்கமாகிய "வரலாற்று நாயகர்களின் நிகழ்வும் நினைவும்" என்ற நிகழ்ச்சி, தமிழ்த்தாத்தா உ.வே.சா, சிந்தைச்சிற்பி சிங்காரவேலர் ஆகியோரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக திருவள்ளுவர் ஆண்டு 2039, மாசித்திங்கள் 14ம் நாளன்று (26.02.2008) மாலை 0600 மணிக்கு நடைபெற்றது.

பாவலர் பட்டுக்கோட்டையார் அரங்கம் என்று பெயர் சூட்டப்பட்ட அரங்கில் தமிழ் உணர்வாளர்கள் பெரும்திரளாக கலந்துகொண்டனர்.

தோழர்.தமிழ்நாடன் நிகழ்ச்சிக்கு தலைமையேற்க, தோழர்கள்.க.இரகமத்துல்லா, மதியழகன் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சி இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டது. முதல் அமர்வாக "தமிழ்த்தாத்தா உ.வே.சா" வை போற்றும் விதமாக நடந்தது. இவ்வமர்வில்
தோழர்.நிலவனும் தோழர்.பழ.கிருட்டிண்மூர்த்தியும் தமிழ்த்தாத்தவின் சிறப்பியல்புகளையும் பணிகளையும் நினைவூட்டினர்.

முதல் அமர்வு நிறைவுற்றப் பிறகு "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க திருவண்ணாமலை கிளை" தயாரித்து வெளியிட்ட "ஏழுமலை ஜமா" என்ற குறும்படம் திரையிடப்பட்டது.

நிகழ்ச்சியின் இரண்டாம் அமர்வாக "சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர்" பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இவ்வமர்வில் தோழர்.இரா.க.சரவணனும், தோழர்.திருமுருகனும் சிங்காரவேலரின் சேவையையும் கொள்கைகளையும் எடுத்துக்கூறினர். தோழர்.சிவசங்கரன் அவர்கள் சிந்தனைச்சிற்பியை குறித்த கவிதையை வாசித்தார்கள்.

இன்றைய நிகழ்வின் தொடக்கம் முதல் தோழர்.திருமுருகனின் இசையில் தோழர்.இராசகுமாரன் அவர்கள் நான்கு பாடலை பாடினார்கள். தோழர்.செந்தில் அவர்களின் ஒரு பாடலும் இடம்பெற்றது. இப்பாடல்கள் அனைத்தும் பார்வையாளர்கள் அனைவராலும் மிகவும் பாரட்டப்பட்டது.

இன்றைய கூட்டத்தின் தீர்மாங்களாக பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இன்நிகழ்வின் போது "சிந்தனையாளன்" இதழில் வெளிவந்த "தை முதல்நாளே புத்தாண்டு" என்ற கட்டுரையும், உ.வே.சா, சிங்காரவேலரின் வாழ்க்கை குறிப்புகளும் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இறுதியாக தோழர்.அப்துல்கனி அவர்கள் நன்றியுரையாற்ற நிகச்சி இனிதே நிறைவுற்றது.