தமிழர் சமூகநீதி பேரவையின் இரண்டாவது சிறப்புக்கருத்தரங்கமாகிய "தமிழ்க்கூடல்" திட்டமிட்டபடி பங்குனித்திங்கள் 15ம் நாள் மாலை 0400 மணிக்கு "அயோத்திதாசர் அரங்கில்" சிறப்புடன் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கிய கூட்டத்திற்கு தலைமையேற்க தோழர்.சிவசங்கரனையும், முன்னிலை வகிக்க தோழர்.வடலூர் ஆறுமுகம் அவர்களையும், தமிழர் சமூகநீதி பேரவையின் பொதுச்செயலாளர் தோழர்.இரா.க.சரவணன் தனது வரவேற்புரையின் போது கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, தோழர்.அமானுல்லா "மார்க்ஸ்" எனும் நூலை வெளியிட தோழர்.வடலூர் ஆறுமுகம் பெற்றுக்கொண்டர்கள். இந்நூல் விழாவில் பங்கெடுத்த அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இதையடுத்து தோழர்.வடலூர் ஆறுமுகம் அவ்ர்கள் முன்னிலை உரை ஆற்றினார்கள். தனது உரையில், இத்தகைய அமைப்பின் தேவைகளையும் அது செயலாற்ற வேண்டிய பதையையும் எடுத்துக்கூறினார்கள்.
இவரை அடுத்து தலைமையுரை ஆற்றிய தோழர்.சிவசங்கரன் அவர்கள் அயோத்திதாசரின் வாழ்வையும் பணியையும் விரிவாக எடுத்துரைத்தார்கள்.
நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக தோழர்.வளவன் அவ்ர்கள், "நல்ல தமிழ் நாம் பேசுவோம்" என்ற தலைப்பில், தமிழர்கள் தங்கள் பேச்சிலும் வழக்கத்திலும் எவ்வாறெல்லாம் பிற மொழிகளை பயன்படுத்துகின்றனர் என்பதைக்கூறி, அவற்றிற்காண தூய தமிழ் சொற்களையும் கூறியதோடு தமிழின் பெருமைகளையும் கூறினார்கள்.
அடுத்துப்பேச வந்த தோழர்.க.இரகமத்துல்லா அவர்கள், "நிகழ்கால அரசியல்" என்ற தலைப்பில் இன்றைய அரசியல் நிலையையும், தமிழர்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுகின்றனர் என்பதையும் எடுத்துரைத்தார்கள்.
இதன்பிறகு தோழர்கள் திருமுருகன் - இராசகுமாரன் இணையர் வழங்கிய "குவைத் கோணங்கிகள்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தோழர்.வளவனும் தோழர்.செந்திலும் இணைந்து சிறப்பித்தனர்.
அடுத்து, தோழர்.நிலவன் அவர்கள், உணர்ச்சிக்கவிஞர். காசி ஆனந்தனின் இருகவிதையையும் அது விவரிக்கும் வாழ்வியலையும் அழகுற கவிதை நடையில் விளக்கினார்கள்.
குவைத் கோணங்கிகளை அடுத்து தோழர்.பழ.கிருட்டிணமூர்த்தி அவர்கள் "சங்க இலக்கியம்" என்ற தலைப்பில் சங்க இலக்கியங்களைக்குறித்தும் அவற்றின் சிறப்புக்களையும் கூறினார்கள்.
தமிழ்க்கூடலின் இறுதிநிகழ்வாக தோழர்.அறிவுமதி இயக்கிய "நீலம்" என்ற குறும்படம் திரையிடப்பட்டது, தோழர்.சித்தார்த் அவர்கள் இப்படத்தினை குறித்த விமர்சனங்களையும் அது கூறும் செய்தியினையும் வழங்கினார்கள்.
இத்தமிழ்க்கூடலின் தொடக்கம் முதல் தோழர்.திருமுருகனின் இசையில் தோழர்கள். இராசகுமாரன், தோழர்.இராமகிருட்டினன், தோழர்.செந்தில், தோழர்.சுப்பிரமணியன் ஆகியோர் எழுச்சிமிக்க பலபாடல்களைப் பாடினர்.
இந்நிகழ்வில் பங்கெடுத்த அனைவருக்கும், வைக்கம் முகமது பஷீர், பண்டிதர் அயோத்திதாசர் குறித்த கட்டுரைகளும், சித்தார்த் மொழிபெயர்த்த "இதய தேவி" எனும் வைக்கம் முகமது பஷீரின் சிறுகதையும் வழங்கப்பட்டது.
சிற்றுண்டி பரிமாறியப்பின் மாலை 0630 மணிக்கு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
Tuesday, April 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment