அன்பிற்கினிய தோழர்களே..! எழுச்சிமிக்க வணக்கத்தோடு..!
இப்புலம்லபெயர் மண்ணில் உழைத்து சோர்வோர் இளைப்பாறிட...!
இனிய தமிழோடு பதியமிடும் புதிய வித்தின் நல்முத்துக்களாய்..!
தமிழர் புரட்சி எனும் புதிய பதாகை ஏந்தி இலட்சிய சிந்தனைகளோடும்..!
தமிழையும், கலை-இலக்கியத்தையும், மாற்று சிந்தனைகளோடு..!
மனிதம், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் போற்றப்பட..!
தற்கால சமூக வர்க்க பேதங்களையும்..!
சுயநல சூழ்ச்சிகர அரசியலை உடைத்தெரிந்து..!
பொதுநல புரட்சிகர சிந்தனைகளை நோக்கி..!
அன்னைத்தமிழால் ஒன்றிணையும் முகமாக..!
உலகத்தமிழரிடையே அறிவார்ந்த மாற்று அரசியலை உறுவாக்கிட..!
குவைத் நாட்டில் ஒரு புதிய களம் ஒன்று அமைக்கப்பட்டது. அதற்கு
தமிழர் சமூகநீதி பேரவை
என பெயரிடப்பட்டது. அமைப்புக்குழுவினரின் முன்னிலையில் 15-02-2008 அன்று இரவு 8-30மணிக்கு மிர்காப் பகுதியிலுள்ள தஞ்சை உணவத்தில் முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகள் விவரம் வருமாறு.
தலைவர் - தோழர். தமிழ்நாடன்
துணைத்தலைவர் - தோழர்.வயி.பி.மதியழகன்
பொதுச்செயலாளர் - தோழர். இரா.க. சரவணன்
செயலாளர் - தோழர். கா. இரகமத்துல்லா
துணைச்செயலாளர் - தோழர்.நிலவன்
பொருளாளர் - தோழர்.நாஞ்சில். சுரேசு
சட்ட ஆலோசகர் - தோழர்.நூ. அன்வர்அலி
செய்தி தொடர்பாளர்கள் - தோழர்கள். முனி.சிவசங்கரன், தே. செந்தில்
செயற்குழு உறுப்பினர்கள் - தோழர்.திருமுருகன், அப்துல்கனி, சத்யா, சேந்தை இரவீந்தர்.
அனைத்து நிர்வாகிகளும் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிர்வாகிகள் தேர்வுக்குப்பின் தோழர். கு.செந்தில்குமார் அவர்கள் புரட்சிப்பா பாடினார்கள். தோழர்.அ.அமானுல்லா அவர்கள் நன்றியுரை வழங்க தேநீர் விருந்தோடு கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
No comments:
Post a Comment